தமிழ்நாட்டில் பிறந்த வெங்கடேஷ், 1985-ல் வெளியான‘ஜானகீய கோதாதி’ படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மோகன்லால் நடித்த ‘ராஜாவின்டே மகன்’ படம் மூலம் இசை அமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
மலையாளத் திரையுலகில் 80 மற்றும் 90-களில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.தமிழில் ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட படங்கள் மற்றும் பல மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பின்னணி இசை மற்றும் பாடல்களை அமைத்து, 1993-ல் கேரள மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் (70) இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.
