மும்பையில் தறிகெட்டு சென்ற பேருந்து மோதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் சென்ற வாகனங்கள் மீது பேருந்து மோதியதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.