புதுச்சேரியில் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் சாலை விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து வருகின்றனர். பிரதான போக்குவரத்து பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்டு வாகனஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.
வாகன பதிவு எண்களை மறைத்தும் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.