ரயில்வே வாரிய உத்தரவின்படி, ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில், ரயில் பெட்டிகளில் மொபைல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயின்ட்களுக்கு, மின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது.
இது, கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சமீப காலமாக ரயில் பெட்டிகளில், ‘சார்ஜிங் பாயின்ட்’ வேலை செய்யவில்லை’ என, பயணியர் சிலர் ரயில்வே உதவி எண்ணுக்கும், செயலிக்கும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயின்ட்களுக்கு, இரவு 11:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாகவும், போன் சார்ஜிங் வசதி இருக்காது எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.