கச்சத்தீவு மீட்பு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பு குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவர இருந்த நிலையில், கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு ஆண்டுகளில் கட்சத் தீவை மீட்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும், 16 ஆண்டுகள், 5 பிரதமர்கள் தலைமையில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, கட்சத் தீவை மீட்க திமுக என்ன செய்தது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாங்கள் செய்வது இருக்கட்டும், பதவியில் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, கட்சத் தீவை மீட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தாரா எனவும் கேள்வி எழுப்பினார்.