“சார்”களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிச்சாமிக்கு அதிமுகவின் “சார்”களை நினைவிருக்கிறதா? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், சென்னையில் 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகர் சாரையும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி அருளானந்தம் சாரையும், மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி சாரையும், மறந்து விட்டீர்களா என கேள்வி எழுப்பி, எடப்பாடி பழனிச்சாமியின் பதிவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.