தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது : பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் புகார் கொடுக்க முன் வர வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.