தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இனி அரசுப்பள்ளிகளில் பாலியல் விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்தால் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.