Wednesday, February 19, 2025

அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news