2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பட்ஜெட்டில் மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வருமானவரி கட்டத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.
வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.