25 ஹீரோயின்களைத் திருமணம் செய்த
பிரபலத் தமிழ் ஹீரோ

41
Advertisement

பிரபல ஹீரோ ஒருவர், தான் 25 ஹீரோயின்களைத்
திருமணம் செய்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வேறுயாருமல்ல, நம்ம சத்யராஜ்தான்.

யாரிடம் அவர் அப்படிக்கூறினார் என்பதைக்
கேட்கலாம் வாருங்கள்….

Advertisement

சென்னையில் ராதே ஷ்யாம் படத்துக்கான பத்திரிகையாளர்
சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் சத்யராஜ்
தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகப் பேசி
கலகலப்பூட்டினார்.

நான் ஹீரோவாக நடித்தபோது 25 ஹீரோயின்களைக்
கல்யாணம் செய்திருக்கிறேன். அதை என்னவென்று
சொல்வது? நடிப்பை நடிப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள
வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் பேசியது நகைச்சுவையாகவும்
வேடிக்கையாகவும் அமைந்து வைரலாகப் பரவியது.

நடிகர் சத்யராஜின் இந்த காமெடியான பேச்சை, மார்ச் 11 ஆம்
தேதி திரையரங்குகளில் வெளியான ராதே ஷ்யாம் படத்துக்கான
பப்ளிசிட்டியாகவே திரைப்பட விமர்சகர்கள் கருதுகின்றனர்.