Friday, March 21, 2025

கோயில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் திருட முயன்ற நபர்

தஞ்சை புன்னைநல்லூர் கோயில் உண்டியலில், காந்தம் வைத்து நூதன முறையில் பணம் நகை திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

புன்னைநல்லூர் கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர், உண்டியல் அருகே நின்று காந்தம் வைத்து நூதன முறையில் உண்டியலில் இருந்து பணம் நகைகளை திருட முயன்றுள்ளார். அதை பார்த்ததும், கோயில் ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கங்காபுரம் பகுதியைச்சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news