Thursday, March 20, 2025

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ஊளுந்துர்பேட்டை அருகே, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கோவிந்தராஜபட்டினம் கிராமத்தைச்சேர்ந்த அண்ணாமலை என்பவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை, ஊளுந்துர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து. நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியின் பரிந்துரையின் பேரில், அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Latest news