சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பாபு. கேரளாவில் கூலி வேலை செய்து வந்த இவர், அங்குள்ள பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் தங்கை மகளான 17 வயது சிறுமி, பாபு வீட்டில் தங்கியிருந்து 12ஆம் வகுப்பு படித்து வந்தாள். அந்த சிறுமியிடம் பாபு ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவள் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அவள் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வவக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.