Saturday, December 6, 2025

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை : தேதியை அறிவித்த உதயநிதி ஸ்டாலின்

திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளி ருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பின ருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News