பாலிவுட்டுக்கு பறக்கும் பிரதீப் – Pan India star ஆக உருவெடுக்கிறாரா?

182
Advertisement

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் வசூலில் சிறப்பாக கல்லா கட்டியதோடு சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

Phoneஐ மாற்றிக்கொள்ளும் freshஆன concept, நகைச்சுவையாக பரிமாறப்பட்ட 2K கிட்ஸின் வாழ்க்கை முறை, யுவனின் trademark இசை என ‘லவ் டுடே’ அப்லாஸ் அள்ளிய காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்நிலையில், பாலிவுட்டில் Phantom Studios மற்றும் AGS Entertainment நிறுவனங்கள் இணைந்து ‘லவ் டுடே’ படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் நடிகர்களை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.