எரிபொருள் விலைகள் பொருளாதாரத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாநில வரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் போன்ற காரணங்களால் பெட்ரோல் விலை ஒவ்வொரு பகுதியில் மாறுபடும்.
இதற்கிடையில், உலகில் நம்ப முடியாத அளவிற்கு குறைந்த விலையில் எரிவாயு விற்கப்படும் நாடுகளும் உள்ளன. இதோ, மிகவும் மலிவான எரிபொருள் விலையில் பெற்ற நாடுகளின் முதல் 10 பட்டியல்.
ஈரான் : உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலையைக் கொண்ட நாடாகும். அங்கு **ஒரு லிட்டர் பெட்ரோல் $0.029 (இந்திய மதிப்பில் ₹2.50) என்ற விலையில் கிடைக்கிறது. இதற்கான முக்கிய காரணம், ஈரானில் எண்ணெய் வளம் மிக அதிகமாக உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டிற்காக மக்களுக்கு அரசு அதிக மானியங்கள் வழங்குகிறது.
இதேபோல், லிபியா நாட்டும் மிகக் குறைந்த விலையில் பெட்ரோலை வழங்குகிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ₹2.51 என்ற விலையில் கிடைக்கிறது.
மலிவான பெட்ரோல் விலை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியல்… ஈரான் (ரூ.2.49), லிபியா (ரூ.2.51), வெனிசுலா(ரூ.3.03), அங்கோலா (ரூ.28.44), எகிப்து (ரூ.29.39), அல்ஜீரியா (ரூ.29.4), குவைத் (ரூ.29.65), துருக்மெனிஸ்தான் (ரூ.37.11), மலேசியா (ரூ.39.87) மற்றும் சவுதி அரேபியா (ரூ.49) ஆகும்.