Wednesday, October 1, 2025

அரசு மருத்துவமனை ஊழியரை காலால் உதைத்த சட்டக் கல்லூரி மாணவி!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் சார்லஸ் (வயது 44). இவர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து வந்தார். அப்போது உடனே அவருக்கு ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு வில்லியம் சார்லஸ், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருக்கின்றனர்.ஆகையால், வரிசைப்படி தான் ஸ்கேன் எடுக்க முடியும் ஆகவே வரிசையில் வாருங்கள் என கறாராக கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிரிஜா ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு வில்லியம் சார்லசை காலால் எட்டி உதைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இது குறித்து வில்லியம் சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கிரிஜா மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியர் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிஜா தொடர்ந்து திருச்சி மாநகர காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் சட்டக் கல்லூரி மாணவி என்ற போர்வையில் மிரட்டுவதாக தொடர்ந்து புகார் எழுவது குறிப்பிடத்தக்கது.

நாம் இருக்கும் உயர்ந்த பதவியோ, படிப்போ, பணமோ இது எவையும் வைத்து ஆணவத்தில் ஆடினால், கடைசியில் அது வேறு விதமான விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதை மறக்க கூடாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News