Wednesday, February 18, 2026

நிலச்சரிவால் கர்நாடகாவில் ரயில் சேவை பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மலைப்பகுதியில் இன்று அதிகாலை (ஜூன் 21) பெரிய பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால், பெங்களூரு – கண்ணூர் எக்ஸ்பிரஸ், பெங்களூர் – முர்தேஷ்வர் எக்ஸ்பிரஸ், விஜயப்புரா – மங்களூர் மத்திய எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

Related News

Latest News