கல்யாணமும் கடந்து போகும்…91 வயதில் காதலில் விழுந்த பிரபல தொழிலதிபர்!

42
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபரும், DLF குழுமத்தின் chairmanனுமான குஷால் பால் சிங் 2008ஆம் ஆண்டு Forbes பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தவர்.

2018ஆம் ஆண்டில் தனது மனைவியை கேன்சர் நோய்க்கு பறிகொடுத்த குஷால், 91 வயதில் மலர்ந்துள்ள புதிய காதலை குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

65 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு, மனைவி இந்திரா சிங்கை இழந்த குஷால் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகி 2020ஆம் ஆண்டு DLF குழுமத்தின் பொறுப்பில் இருந்து விலகினார்.

Advertisement

வழக்கமான சுறுசுறுப்பு, நேர்மறையான எண்ணங்கள் அனைத்தையும் இழந்திருந்த நிலையில் தான் ஷீனா என்ற பெண்ணை சந்தித்ததாக கூறும் குஷால், ஆற்றலும் அன்பும் நிறைந்த இப்பெண் தன்னை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இறப்பதற்கு முன் தனது மனைவி தன்னை வாழ்க்கையை என்றும் விட்டுவிடக்கூடாது என அறிவுரை வழங்கியதாக குறிப்பிடும் குஷால், மீதி இருக்கும் தனது வாழ்க்கையை ஷீனாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

புதிய காதல் அளித்த உத்வேகத்துடன் DLF குழுமப் பணிகளிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறார் குஷால்.

இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமாக இயங்கி வரும் குர்கான் பகுதியில் பூகம்பத்தால் பாதிக்கப்படாத அலுவலக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை குஷால் வடிவமைத்து சிறப்பான அங்கீகாரம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.