ஆண்களுக்கு முத்தமிட்டுக்
கேலிசெய்யும் இளம்பெண்

64
Advertisement

https://www.instagram.com/reel/CbUTBsyJ4P6/?utm_source=ig_web_copy_link

ஆண்களின் முதுகில் முத்தமிட்டுக் கேலிசெய்யும்
இளம்பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமன் பிரிட்டனில்
பிறந்த செயின்ட் பேட்ரிக் 16 வயதில் நாடு கடத்தப்பட்டு
அயர்லாந்துக்கு அடிமையாகக் கொண்டுசெல்லப்பட்டார்.

Advertisement

என்றாலும் அங்கு அவர் தனது வாழ்நாளில் மடங்கள்,
தேவாலயங்கள், பள்ளிகளை நிறுவினார். கிபி 461 ஆம்
ஆண்டு, மார்ச் 17 ஆம் தேதி அவர் மரணத்தைத் தழுவினார்.

அயர்லாந்து நாட்டின் முதன்மையான புரவலர் புனிதரான
செயின்ட் பேட்ரிக் மறைவு நாள் ஒவ்வோராண்டும் கலாச்சாரம்
மற்றும் மதப் பண்டிகை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த நாளில் பிரம்மாண்டமான கேளிக்கைகளும் விருந்துகளும்
அணிவகுப்புகளும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டும் செயின்ட் பேட்ரிக் தினம்
சிட்னி நகரிலுள்ள இரவு விடுதியில் கொண்டாடப்பட்டது.
அப்போது ஆஸ்திரேலிய இளம்பெண்ணொருத்தி, தனக்கு
அறிமுகம் இல்லாத ஆணின் முதுகில் முத்தமிட்டு சேட்டை
செய்துள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

லிப்ஸ்டிக் பூசிய அந்த இளம்பெண் வெள்ளை டிசர்ட்
அணிந்துள்ள ஆணின் முதுகில் மீண்டும் மீண்டும்
வெட்கத்தோடு முத்தமிடத் தொடங்கினாள். அந்த
ஆணோ அதை உணராமல் மதுபானம் அருந்துவதிலேயே
கவனமாக உள்ளார். அதைப் பயன்படுத்திக்கொண்டு
அந்த இளம்பெண் மறுபடியும் மறுபடியும் முத்தமிட்ட
காட்சியை எவரோ ஒருவர் செல்போனில் படம்பிடித்து
இணையத்தில் பதிவிட தற்போது வைரலாகிவிட்டது.

முத்தமிட்ட பெண்ணை மொத்த வலைத்தளமும் திட்டித்தீர்த்துள்ளது.