“கர” படம்; பாக்ஸ் ஆபிஸில் அதிரடி தொடக்கம்.. 2 வது நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?

இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ள புதிய திரைப்படம் “கர” தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் தனுஷுடன் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வழங்கியுள்ளார்.

திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. “கர” திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கதைக்களம், நடிப்பு மற்றும் பின்னணி இசை ஆகியவை பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, முதல் நாளில் படம் சுமார் ரூ.6.20 கோடி வசூல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் வசூல் மேலும் உயர்ந்து ரூ.6.95 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் மொத்த வசூல் ரூ.15.20 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வசூல் மட்டும் ரூ.13.15 கோடியாக பதிவாகியுள்ளது.

திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல வசூல் மற்றும் நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருப்பதால், வரும் நாட்களில் இதன் வருமானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News