Sunday, December 7, 2025

வசூலில் கலக்கும் காந்தா.. 3 நாட்களில் இத்தனை கோடியா?

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் அடுத்ததாக ‘காந்தா’ என்ற படத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், காந்தா படம் 3 நாட்களில் ரூ.24.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News