சென்னை, வேப்பேரி பெரியார் திடலில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது பேசிய வீரமணி, பெண்களை தலைநிமிர வைத்தது பெரியார் என்றும், சமூக கொடுமைகளை பெரியார் மனிதநேயத்தோடு எதிர்த்தார் எனவும் கூறினார்.
பெரியார் என்ன செய்தார் என்று கேட்பதைவிட, என்ன செய்யவில்லை என்று கேளுங்கள் என்று கூறிய வீரமணி, பெரியாரை எந்த கொம்பனாலும் தொட்டுவிட முடியாது என்று எச்சரித்தார்.