Friday, December 5, 2025

ஜெய் ஷாவுக்கு பேட் கூட பிடிக்கத் தெரியாது – ராகுல் காந்தி விமர்சனம்

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஜெய் ஷாவுக்கு பேட் கூட பிடிக்கத் தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் அதானி, அம்பானி அல்லது அமித் ஷாவின் பிள்ளைகளாக இருந்தால் மட்டுமே உங்களால் பெரிய கனவு காண முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி தலைவராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ரன் எடுப்பாரா என்பதை விட, அவருக்கு கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என்றுகூட தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஆனாலும் அவர்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் அனைத்தையும் அவர்தான் கட்டுப்படுத்துகிறார் என்றால், அனைத்திற்கும் காரணம் பணம்தான் என்று அவர் சாடியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News