Tuesday, July 1, 2025

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news