Sunday, December 7, 2025

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் ‘தளபதி கச்சேரி’ என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

இந்நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். எனவே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News