Saturday, December 6, 2025

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா : வெளியான புது அப்டேட்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ‘தளபதி கச்சேரி’ என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அப்பேட் கொடுத்துள்ளது. அந்த அப்டேட் , இன்று மாலை 05.30 மணிக்கு வெளியாகும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் டிசம்பர் மாதம், 27ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News