2024-25 நிதியாண்டின் தொடக்கம், ஏப்ரல் 1, 2025 அன்று புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன, இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக TDS எனப்படும் (Tax Deducted at Source) விதிகளிலும் சில முக்கிய திருத்தங்கள் காத்திருக்கின்றன.
இந்த மாற்றங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். புதிய வரி விதிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நன்மைகள் அளிக்கின்றன. இது தனிநபர்களின் வரிச்சுமையை குறைத்து, அவர்களின் செலவுகளை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து, மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகை (FDs), தொடர் வைப்புத்தொகை (RDs) மற்றும் அதே போன்ற முதலீடுகளிலிருந்து ரூ.1 லட்சம் வரை வரும் வட்டி வருமானத்திற்கு TDS வசூலிடப்படமாட்டாது. இதன் மூலம், குறைந்த வருமானம் பெற்றவர்களுக்கு வரி முறைகள் மிகவும் எளிமையானதாக மாறும், குறிப்பாக வட்டி வருமானத்தை வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக நம்பும் மூத்த குடிமக்களுக்கு இது மிக முக்கியமான நன்மையை ஏற்படுத்துகிறது.
பொதுமக்களுக்கான TDS வரம்பு ரூ.40,000 இலிருந்து ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு தனிநபரின் வட்டி வருமானம் ஆண்டுதோறும் ரூ.50,000 ஐத் தாண்டினால் மட்டுமே வங்கிகள் TDS-ஐ கழிக்கின்றன. இது, குறைந்த வட்டி வருமானம் கொண்டவர்களுக்கு வரி சுமையை குறைக்க உதவுகிறது.
மேலும், காப்பீட்டு முகவர்களுக்கான வரம்பும் ரூ.15,000 இலிருந்து ரூ.20,000 வரை உயர்க்கப்பட்டுள்ளது. பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் பங்குகளில் முதலீட்டாளர்களுக்கான டிவிடெண்ட் வரி விலக்கு வரம்பு ரூ.5,000 இலிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள், ஒரே நேரத்தில் வரி செலுத்துவோரின் பாக்கியைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்தில் பொதுமக்களுக்கு ஓரளவு தளர்வை தருவதாக இருக்கின்றது.