Friday, March 21, 2025

காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா? கொந்தளித்த சீமான்

திருத்தணி நகரில் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கப்படும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது.

திருத்தணி நகரில், பெருந்தமிழர் ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவைக் கைவிட வேண்டும். என அவர் கூறியுள்ளார்.

Latest news