Wednesday, March 26, 2025

“ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது?”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை.

பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் முகவர்களுமே மொழித் திணிப்பை ஆதரிக்கின்றனர். இந்தி திணிப்பை ஆளுநர் ஆதரித்து பேசியிருப்பது புதியதல்ல. பொருட்படுத்த வேண்டியதுமல்ல.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர் ரவி.

ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள்.

நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரெயில்வேயிலும் மத்திய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு. ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது? எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest news