அரசியலில் களமிறங்குகிறாரா தனுஷ்? அடுத்தகட்டத் திட்டம் இதுவா?

நடிகர் தனுஷ் அரசியலில் ஈடுபட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ், மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தனது பிறந்தநாள் விழாவில் வலியுறுத்தியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பெண்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அரசியல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இருப்பினும், பங்கேற்ற பெண்களுக்கு காமாட்சி அம்மன் விளக்குகளை வழங்கி, அனைவருடனும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையே, அடுத்தகட்டமாகத் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மூன்று ஆசிரியர்கள், ஓர் உதவியாளர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியத்தையும் நற்பணி இயக்கமே வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கி, பின்னர் அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பணிகள் ஜனவரி மாதம் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Related News

Latest News