Thursday, March 20, 2025

தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. IRCTC புதிய அறிவிப்பு

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்நிலையில், தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Latest news