Saturday, March 15, 2025

ஆன்லைன் மூலமாக வருகைப் பதிவு செய்ய மொபைல் செயலி அறிமுகம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி ஆன்லைன் மூலமாக
வருகைப் பதிவு செய்ய புதிய மொபைல் செயலி ஒன்றை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை, வருகைப் பதிவேடு நோட்டு வழியே பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதல் புதுச்சேரியின் அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் மயம் காரணமாக காகிதம் இல்லா நடைமுறைக்கு புதுச்சேரியின் ஒவ்வொரு துறைகளும் கொண்டுவரப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கல்வித்துறையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறையின் சமக்ரா சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநர் தினகரன், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை. இனி ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், மொபைல் செயலியையும் அனுப்பியுள்ளார். மேலும், pudupallikalvi.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news