மர்மங்கள் தொடரும் எலும்புக்கூடு ஏரி!

182
Advertisement

பொதுவாக நாம் அனைவரும் பலவகையான ஏரிகளை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் யாராலேயுமே நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு எலும்புக்கூடுகள் நிறைந்த ஏறி ஒன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது அந்த ஏரியை வனத்துறை ரேஞ்சர்-ஆன ஹரி கிருஷ்ணன் கண்டுபிடித்துள்ளார்.

4,700 மீட்டர் உயரத்தில் ஒரு சிறிய பனிக்கட்டி ஏறி தெளிவான தண்ணீரால் சூழப்பட்டிருந்தது அதனுடையே மர்மமான சில விஷயங்களும் அந்த ஏரியில் இருந்தன.

தற்பொழுது ROOPKAND ஏரி அல்லது எலும்புக்கூடு ஏரி என்றழைக்கப்படும் அந்த ஏரி முழுவதும் எலும்புகூடுகளாக நிறைந்திருந்தன.இவ்விடமிருந்தே அனைவரிடையேயும் ஒரு கேள்வி எழும்பியது என்னவென்றால் ,எப்படி இவ்வளவு எலும்புக்கூடுகள் இந்த ஏரியை ஆக்ரமித்ததென்று.

இந்த கேள்விகளுக்கு பதிலாக கூறப்பட்டதாவது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாகுள் ஊடுருவ முயன்ற ஜப்பானிய ராணுவ வீரர்களின் எலும்புகூடுகளாக இருக்கலாம் என்று தோராயமாக கருதப்பட்ட நிலையில் ஆய்வுமுடிவுகளில் அந்த எலும்பு கூடுகள் 500 வருட பழமையானதாக இருந்ததால் அதற்க்கு வாய்ப்பிருக்காது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த எலும்புக்கூடு குறித்து பலவகையான கருத்துகள் வலம்வந்தது அதில் சிலர் அந்த எலும்புக்கூடுகள் போர் முடிந்து அந்த மலை வழியாக வந்த இந்தியா ராணுவர்களுடையதாக இருக்கலாம் என்றும் சிலர் அது நோய் ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எலும்புகூடுகளாக இருக்கலாம் என்றும் கருத்துதெரிவித்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் அதிலிருந்த 38 எலும்புக்கூடை எடுத்து ஆய்வு செய்தனர் அந்த ஆய்வு முடிவின்படி அதில் 23 பேர் தர்காலிக இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்களாகவும், ஒருவர் தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டவராகவும் மற்றும் அதிர்ச்சிகரமான 14 –பெருகில்க்கு கிழக்கு மத்திய தரைக்கடல் பூர்விகமாக இருந்ததென்று தெரியவந்துள்ளது.

ஒவ்வோராண்டும் வசந்தகாலம் வரும்பொளுதெல்லாம் பனிக்கட்டியாலான ஏரி உடைந்து இந்த எலும்புக்கூடுகள் மேலே தெரிகிறதாம்.இறுதியாக இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் எவ்வாறு ROOPKAND ஏரியை வந்தடைந்து என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.