நடனமாட விரும்பும் எலிகள்! ஆச்சரியமூட்டும் ஆய்வு முடிவுகள்

304
Advertisement

மனிதர்கள் மட்டுமே இசையை ரசித்து அதற்கேற்ப உடல் அசைவுகளை வெளிப்படுத்தி நடனம் ஆடும் திறன் படைத்தவர்கள் என நாம் நினைப்பது தவறு என்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளன.

ஜப்பானில் டோக்கியோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், எலிகளுக்கு பிரபல பாப் பாடகியான லேடி காகா (Lady Gaga)வின் Born this Way, Queen இசைக்குழுவின் Another One Bites the Dust மற்றும் மொசார்ட் இசை மேதையின் பியானோ சொனாட்டா ஆகிய பாடல்கள் இசைக்கப்பட்டது.

இந்த பாடல்களை ஒரு நிமிடத்திற்கு 132 beats என்ற வேகத்தில் இசைத்த போது எலிகள் ஆர்வமாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியதாகவும், அந்த வேகத்தை குறைப்பதையோ கூட்டுவதையோ அவைகள் விரும்பவில்லை என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலிகளுக்கு நடனமாட இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த ஆய்வு, அறிவியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.