இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி !!

401
Advertisement

உலகளவில் முன்னணியில் உள்ள சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போது புதிதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துஉள்ளது.

தனிமனத்தின் திறமையை இவ்வுலகிற்கு காட்ட உதவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

அதில் , முதலில் “Reply while you browse” இதன் மூலம் நாம் ஹோம் ஃபீடில் இருக்கும்போது மெசேஜ் வந்தால் தனியாக இன்பாக்ஸ் சென்று ரிப்ளை செய்யாமல் போஸ்ட் பார்த்துகொண்டே ரிப்ளை செய்துகொள்ள முடியம். நாம் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்யும்போது பேக்ரவுண்ட் அனைத்தும் பிளர் ஆகி விடும்.

இரண்டாவதாக , “Quickly send to friends” இந்த அப்டேட் மூலம் நாம் ஒரு பதிவை எளிதாக ஷேர் செய்ய முடியும். ஷேர் பட்டனை அழுத்தி பிடித்தால் அதில் நாம் ஷேர் செய்ய வேண்டிய நபர்களின் ப்ரொஃபைல்கள் காட்டும்.

மூன்றாவதாக , “See Who’s Online” இன்ஸ்டாகிராமில் நண்பர்கள் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும்.

நான்காவது , “Send Messages Quietly” இதன் மூலம் @Silent என்ற வார்த்தையை மெசேஜ்ஜிற்கு முன் பயன்படுத்தினால் மற்றவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் செல்லாமல் மெசேஜ் அனுப்பப்படும்.

ஐந்தாவது , “Keep it on the lo-fi” இதன் மூலம் மற்றவருடன் நாம் உரையாடுவது தனிப்பட்ட வகையில் இருக்கும்.

அடுத்ததாக , “Create a poll with friends” இன்ஸ்டாகிராமில் குரூப் சேட்டில் வாக்கெடுப்பு வைக்கும் விதம் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.

இறுதியாக , Play, Pause and re-play இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் 30 நொடிகள் பிரிவீவ் உள்ள பாடல்களை நண்பர்களுடன் சேட்டில் ஷேர் செய்ய முடியும்.

பயனர்களை ஈர்க்கும் விதம் சமூக வலைதள நிறுவனங்கள் இதுபோன்ற புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் இரு நாடுகளிடையே ஏற்பட்ட மோதலால் இன்ஸ்டாகிராம் பல லட்ச பயனர்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.