விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரை மதுவிலக்கு அமல் பிரிவிற்கு அழைத்து வந்து சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் முழுவதும் மது பாட்டில்கள் வைத்து நூதன முறையில் கடத்தியது தெரியவந்தது.
அவரிடமிருந்து 90 மில்லி அளவு கொண்ட 100 பாட்டில்களும், 150 மில்லி அளவு கொண்ட பிராந்தி 20 பாட்டில்களும் என மொத்தம் 120 பாட்டில்கள் எடுக்கப்பட்டது. விசாரணையில் அவருடைய பெயர் நாகமணி (40) என்பது தெரிய வந்துள்ளது. மது பாட்டில் கடத்தல் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.