Wednesday, March 26, 2025

இதென்னடா Pakistanக்கு வந்த ‘சோதனை’ Indiaவால ‘இத்தனை’ கோடி நஷ்டமா?

கடைசியாக 1996ம் ஆண்டு பாகிஸ்தான் ICC தொடரை நடத்தியது. 29 ஆண்டுகள் கழித்து இந்த 2025ம் ஆண்டில் தான் மீண்டும் ICC தொடரினை நடத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் இந்த தொடரினை நடத்தியதற்கு அவர்கள் சும்மாவே இருந்திருக்கலாம்.

ஒருபுறம் இந்தியா பைனலுக்கு முன்னேறியதால், தொடரை நடத்தினாலும் சொந்த மண்ணில் அவர்களால், இறுதிப்போட்டியை நடத்த முடியவில்லை. மற்றொரு புறம் இந்தியா துபாய் மண்ணில் விளையாடியதால், அதற்கும் கையில் இருந்து பணம் கொடுக்க வேண்டிய சூழல்.

இது மட்டுமின்றி மழையால் 3 மேட்ச்கள் ரத்தானதால், அதற்கும் டிக்கெட் பணத்தினை திரும்ப அளித்துள்ளனர். இந்தநிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலமாக மட்டும், 195 கோடி ரூபாயை பாகிஸ்தான் இழந்துள்ளதாக தெரிகிறது.

துபாயில் இந்தியா மொத்தம் 4 மேட்ச்கள் விளையாடியது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 156 கோடி ரூபாயை அளித்துள்ளது. அடுத்ததாக இறுதிப்போட்டி லாகூரில் இருந்து துபாய்க்கு மாறியதால், 39 கோடி ரூபாயை பாகிஸ்தான் இழந்துள்ளது.

இது தவிர்த்து மைதானங்களை புதுப்பித்தது, விளம்பர செலவுகள், டிக்கெட் ரத்து கட்டணம் என மேலும் பல கோடி ரூபாய் நஷ்டம் PCBக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் லாபத்தை விடவும் நஷ்டமே அதிகம் இருப்பதால், ஏன் தான் இந்த தொடரை நடத்தினோம்?, என்று புலம்பும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வளவு நஷ்டமும் இந்தியாவால் ஏற்பட்டது என்பதால், ICC இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் புகார் அளித்துள்ளதாம். ஆனால் BCCIஐ பகைத்துக் கொள்ளும் துணிவு ICCக்கு இல்லை என்பதால், பாகிஸ்தான் அளித்த புகார்களின் நிலை ‘கிணற்றில் போட்ட கல்’ போல தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news