சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது.
50 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. நிதானமாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
மினி உலகக்கோப்பை எனக் கருதப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இறுதியாக 2013ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்று இருந்தது.