கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

390

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கும் வகையில், அதன் தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கேரளவில் உள்ள பாலராமபுரம் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொது வசதி பயிற்சி மையத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க, கைத்தறி பொருட்களை இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தயாரிப்புகளை பல வகைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

நெசவாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இ-மார்கெட்டிங் மற்றும் அரசின் இணையதள பக்கத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.