சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள பசுமை எரிசக்தி பிரிவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்ததில் குளறுபடி நடந்ததாக வந்த புகாரையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.