Thursday, December 25, 2025

தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணி : தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

தூத்துக்குடியில், தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவின் பேரில், தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உணவு மாதிரிகளை ஆய்விற்காக எடுத்துச்சென்றனர்.

தரமற்ற முறையில், உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தள்ளுவண்டி கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

Related News

Latest News