விஜய்க்கு ஆதரவா? வாக்கு எண்ணிக்கைக்கு முன் இளையராஜா செய்த செயல் வைரல்…

வரும் மே 4 திங்கள்கிழமை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அரசியல் சூழலைக் காக்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் முதன்முறையாக விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி களம் இறங்கியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக் கணிப்பில் விஜய் தலைமையிலான ஆட்சி அமையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருப்பது இந்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் சேனலில் விஜய்யின் சிறுவயது புகைப்படத்துடன் கூடிய ஒரு பாடலை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பகிர்ந்துள்ள பாடல், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு…’ என்ற பாடலாகும்.

இந்தப் பாடல் தற்போது அரசியல் சூழலுடன் பொருந்தும் வகையில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் ராதிகா மற்றும் ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இந்தச் செயல் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு, விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News