காலாவதியான GAS CYLINDER-களை கண்டறிவது எப்படி?விழிப்புடன் செயல்படுங்கள்..

212
Advertisement

அண்மையில் இணையத்தில் வெளியான முக்கிய தகவலொன்று அனைவரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

கேஸ் சிலிண்டருக்கு 10 முதளில் 15 வருடங்கள் வரைமட்டுமே ஆயுட்காலம் உண்டு,அநேக கேஸ் விநியோகர்கள் காலாவதியான சிலிண்டரில் கேஸை நிரப்பி அதை விற்பனை செய்கிறார்களாம்.

எனவே நாம் அனைவரயும் விழிப்புடன் இருக்கவேண்டும் காலாவதியான சிலிண்டரை கண்டறிவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.

ஆனால் அதை மாற்றாமல் காலாவதியான சிலிண்டர்களில் மீண்டும் மீண்டும் கேஸை நிரப்பி விநியோகம் செய்கிறார்கள்.இதனால் கேஸ் கசிந்து சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து நேர அதிகவாய்ப்புள்ளது.

இதனைத்தடுக்க காலாவதியான சிலிண்டரை உபயோகிக்ககூடாதது அதனை எப்படி கண்டறிவது என்னும் தகவல் இணையத்தில் வெளியாகியது அந்த தகவலின்படி சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும்.

அது கழுத்து பகுதியாகும்.அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), ‘பி’ என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), ‘சி’ என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), ‘டி’ என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும்.

உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.