Friday, January 24, 2025

இனி பிச்சை போட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு…!! இந்தியாவில் இப்படி ஒரு நடவடிக்கையா..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை இந்தியாவின் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பிச்சைக்கார்களுக்கு பணம் கொடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  “நாங்கள் பிச்சைக்காரர்கள் குறித்த அறிக்கைகளை தயாரித்தபோது, சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், சிலரின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் கண்டுபிடித்தோம்.

இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு வெளியிட்டுள்ளோம். பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இம்மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1ம் தேதி முதல் யாராவது பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” என அவர் கூறியுள்ளார்.

Latest news