Monday, February 10, 2025

தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்றால், அவரது கட்சிக்கு தான் கேடு – துரை வைகோ

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்றால், அவரது கட்சிக்கு தான் கேடு ஏற்படும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தேவையற்றது என்று கூறினார். நாட்டில் உள்ள பிரச்சனைகள் திசை திருப்ப பாஜக அரசு மதம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக பங்கேற்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்ற துரை வைகோ, தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றால் தவெக கட்சிக்கு தான் கேடு ஏற்படும் என்று எச்சரித்தார்.

Latest news