கரூரில் திமுக அலுவலகத்தில் இன்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் நடந்த சம்பவம் யாராலும், எந்த சூழ்நிலையாலும் நினைத்து பார்க்க முடியாத துயர சம்பவம். இனி இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கும், எக்காரணம் கொண்டும் நடந்துவிடக் கூடாது. கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. எதையும் நான் குறை சொல்லவில்லை.
வரும் நாட்களில் இது போன்று நடந்துவிட கூடாது என்று தான் சொல்கிறோம். தவெக கூட்டத்தில் எங்கேயாவது தண்ணீர் பாட்டில் இருந்ததா? ஒரு பிஸ்கட் பாக்கெட்களாவது இருந்ததா? காலையில் இருந்து அவர்கள் நிற்கும் போது நீங்களே சொல்லுங்கள். குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.