Friday, April 18, 2025

நவீன முறையில் அஞ்சலி செலுத்திய ஐஸ்கிரீம் வியாபாரிகள்

ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் சக ஐஸ்கிரீம் வியாபாரிகள் ஆச்சரியமான முறையில் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியது இதயத்தை வருடியுள்ளது.

தென்கிழக்கு லண்டனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஸ்கிரீம் விற்பனை செய்துவந்தவர் ஹசன் டெர்விஷ். 62 வயதான இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த சக ஐஸ்கிரீம் வியாபாரிகள் முடிவுசெய்தனர்.

அதற்காக, தங்கள் அனைவரின் ஐஸ்கிரீம் டிரக்குகளையும் வரிசையாக, டெர்விஷ் உடலுக்குப் பின்னால் அணிவகுத்துச்செல்ல ஏற்பாடு செய்தனர்.

ஐஸ்கிரீம் டிரக்குகள் பின்தொடரக் கல்லறைக்குச் சென்ற டெர்விஷின் இறுதி ஊர்வலத்தை ஏராளமானோர் கண்டு மனம் உருகினர். அவர்களும் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே டெர்விஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாறுபட்ட முறையில் நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news