Monday, January 20, 2025

“அண்ணாமலைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல” – திருமாவளவன் பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றியும் திமுக அரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் “நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன். திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்” என அண்ணாமலை பேட்டியளித்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை லண்டன் சென்றுவிட்டு வந்த பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் அண்ணாமலையின் போராட்டம் தேவையற்றது. சாட்டையடி போராட்டம் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

Latest news